முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விளையாட்டு வீரர்கள்...

மலேசியாவில் இருந்து பாதுகாப்பாக மீட்டு வந்ததற்கு விளையாட்டு வீரர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விளையாட்டு வீரர்கள்...
Published on
மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கலந்து கொள்ள சென்ற தமிழக வீரர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக அழைத்து வந்ததற்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்ற வீரர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர் என 29 பேர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவித்தனர். ஆனால் அவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்படுவது குறித்து தமிழக முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடி நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அனைவரும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வரப்பட்டனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்கள் அனைவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com