கோலாகலமாக நடைபெற்றுவரும் அத்திவரதர் உற்சவம் : ஆறு நாட்களில் 5 லட்சம் பேர் சுவாமி தரிசனம்

ஏழாம் நாள் உற்சவமான இன்று அத்திவரதர் மஞ்சள் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
கோலாகலமாக நடைபெற்றுவரும் அத்திவரதர் உற்சவம் : ஆறு நாட்களில் 5 லட்சம் பேர் சுவாமி தரிசனம்
Published on
ஏழாம் நாள் உற்சவமான இன்று அத்திவரதர் மஞ்சள் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் ஏழாம் நாளாகிய இன்று மஞ்சள் பட்டு உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலையிலிருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 6 நாட்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com