ராமர் நிறப் பட்டு அலங்காரத்தில் அத்திவரதர்... காஞ்சியில் குவிந்த பக்தர்கள்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ராமர் நிறப் பட்டு அலங்காரத்தில் அத்திவரதர்... காஞ்சியில் குவிந்த பக்தர்கள்
Published on
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறப் பட்டு ஆடையில், பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்து வருகிறார். இதன்படி 14 ஆம் நாளான இன்று, அத்திவரதருக்கு ராமர் நிற பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டது. இன்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகாலை முதலே அதிகரித்து காணப்பட்டது.கேரள மாநில ஆளுநர் சதாசிவம் குடும்பத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com