பெண்ணின் தலையில் அடித்த இளைஞர்..`20ஆம் நாள்’ -மயங்கி விழுந்து பலியான பெண்..

x

திருச்சி மாவட்டம் அத்தாணி பகுதியில் இடப்பிரச்சனையில் பெண் உயிரிழந்ததால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அத்தாணியில் வசித்த ஜீவா மற்றும் மாலதி ஆகியோரிடையே இடப்பிரச்சனை தொடர்பாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வாக்குவாதத்தில் மாலதியின் மகன் ஹெல்மெட்டால், ஜீவாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் 20 நாட்களுக்கும் மேலாக தலைச்சுற்றலால் அவதிப்பட்டு வந்த ஜீவா, திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜீவாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், வட்டாட்சியர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்