``நீங்களாவது என் உயிரை காப்பாத்துங்க..'' கட்சி பிரமுகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

x

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே, ரவுடிகள் தன்னை தாக்கியதாகவும், தன்னை காப்பாற்றுமாறும், பா.ஜ.க பிரமுகர் பேசும் வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜதுரை என்பவர், இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்திருப்பதுடன், பா.ஜ.க.வில் கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். குடியிருந்த வீட்டை இடித்துவிட்டு ராஜதுரை புதிதாக வீடு கட்ட தொடங்கியபோது, பக்கத்துவீட்டில் வசிக்கும் திமுக பிரமுகரான பாலமுருகன் என்பவர் உள்ளிட்ட சிலர் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜதுரை உள்ளிட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக சாயர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி பாலமுருகன், அவரது தந்தை பால்ராஜ் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ரவுடிகளால் தான் தாக்கப்பட்டதாக ராஜதுரை பேசும் வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்