திருப்பூரில் ஜோதிடரை கொலை செய்த சம்பவம்: கொலையாளி அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரண்

திருப்பூரில் ஜோதிடரை நடுரோட்டில் வெட்டி கொலை செய்த கொலையாளி ரகு சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருப்பூரில் ஜோதிடரை கொலை செய்த சம்பவம்: கொலையாளி அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரண்
Published on
திருப்பூரில் ஜோதிடம் பார்த்து வரும் ரமேஷை கடந்த திங்கட்கிழமை ஹெல்மெட் அணிந்த நபர் சாலையின் நடுவே பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் கொலையாளி ரகு சரணடைந்தார். திருமணமான பெண் ஒருவரை வசியம் செய்து தருமாறு ரகு தெரிவித்த நிலையில் கிளிஜோசியர் ரமேஷ் அதை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரகுவும் அந்த பெண்ணும் திருப்பூரில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் அந்த பெண் தனது கணவருடனே சென்று விட்டதால் ரகு மீண்டும் ரமேஷை நாடி வந்துள்ளார். அந்த பெண்ணை வசியம் செய்து தருமாறு கூறிய ரகு, அதற்காக ரமேஷிடம் பணத்தையும் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட ரமேஷ், வசியம் செய்யாததால் ஆத்திரமடைந்த ரகு, ஜோதிடரை கொடூரமாக கொன்றுள்ளார். இன்று அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான ரகுவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com