``மீண்டும் தாக்குதல்''.. சம்பவம்காங்கிரஸ் நிர்வாகியிடம் உடைத்து பேசிய மாணவர் சின்னதுரை

நெல்லையில் மீண்டும் தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரைக்கு, காங்கிரஸ் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் மாணவன் சின்னதுரை. 2023ம் ஆண்டு மாற்று சமுதாய மாணவர்களால் தாக்கப்பட்ட இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீண்டும் தாக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த, காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார், 25000 ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com