மினிலாரி ஏற்றி உதவி ஆய்வாளர் கொலை - தகராறை தட்டிக் கேட்ட போது விபரீதம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு என்பவர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டு உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு என்பவர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டு உள்ளார். குடிபோதையில் முருகவேல் தகராறு செய்ததை, தட்டிக் கேட்டதால், உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், தப்பி ஓடிய முருகவேலை, 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
