Ph.D பயின்ற அசாம் மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை

x

திருவெறும்பூர் அருகே உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் Ph.D பயின்ற அசாம் மாணவி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த அஜித் சந்திரா கோகை என்பவரது மகள் சிபானி கோகை. இவர், திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி Ph.D-யில் 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், அவர் விடுதியில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த நவல்பட்டு போலீசாரின் விசாரணையில், தனது தந்தையுடன் பிறந்த சகோதரர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது, தேர்வில் குறைந்த மார்க் எடுத்தது உள்ளிட்டவையால், அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரியவந்து உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்