ஆசிய மகளிர் துப்பாக்கிச் சுடுதல் - தங்கத்தை தூக்கிய இந்திய வீராங்கனை

x

ஆசிய மகளிர் ட்ராப் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் நீரு தண்டா தங்கம் வென்று அசத்தி உள்ளார். 16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் டிராப் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் நீரு 43 புள்ளிகள் எடுத்து சிறப்பாக செயல்பட்டார். 37 புள்ளிகள் எடுத்த கத்தாரின் பாசில் ரே மற்றும் 29 புள்ளிகள் எடுத்த ஆஷிமா ஆகியோரை முந்தி தங்கம் வென்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்