Asia Cup 2025 | Oman Vs Pakistan | ஓமனை விழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி
பாகிஸ்தான், ஓமன் இடையேயான ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
துபாயில் நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஓமன் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு160 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய ஓமன் அணி 67 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
Next Story
