கேள்வி பட்டதும் யோசிக்காமல் அரசு பள்ளிக்கு 15 லட்சத்தை கொடுத்த லாரன்ஸ்,பாலா
பள்ளிக்கு கழிப்பறை கட்டித்தந்த ராகவா லாரன்ஸ், KPY பாலா
வந்தவாசி அருகே அரசு பள்ளியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நவீன கழிப்பறையையும், குடிநீர் திட்டத்தையும் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் KPY பாலா ஆகியோர் திறந்து வைத்தனர்.
இரும்பேடு கிராமத்தில் 553 மாணவ மாணவிகள் படிக்கும் மேல்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக கழிப்பறை இன்றி மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த KPY பாலா உதவி கேட்டு இருந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி உள்ளார்.
Next Story
