Vadalur Vallalar| ``அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை’’ - வடலூரில் ஏறியது கொடி

`அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை’’ - வடலூரில் ஏறியது கொடி

#vadalurvallalar #vallalar

வடலூரில் வள்ளலாரின் 204-வது அவதார தின விழா கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 204-வது அவதார தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வடலூர் சத்திய ஞான சபை மற்றும் சத்திய தருமசாலையில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டு, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணமும் நடைபெற்றது. சத்திய ஞான சபைக்கு இடம் தானமாக வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் முன்னிலையில், புதிய கொடிமரத்தில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. மேலும், வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமத்திலும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளலார் நிறுவிய அணையா அடுப்பு மூலம் தருமசாலையில் தினமும் மூன்று வேளை அன்னதானம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவதார தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com