களத்தில் மயங்கிய கபடி வீரர் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

களத்தில் மயங்கிய கபடி வீரர் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Published on

மதுரை அருகே கபடி போட்டியில் விளையாடிய வீரர் ஒருவர், மயக்கமடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், மந்திரி ஓடை பகுதியை சேர்ந்தவர் ஜெகன். 22 வயதான இவர் மதுரை அருகே நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டு ரெய்டு சென்ற போது தூக்கி எறியப்பட்டார்.

அப்போது சுவாச நரம்பு செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெகன் உயிரிழந்த நிலையில், அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிநிகழ்வில், கபடி வீரர்கள் உள்பட ஏராளாமானோர் கலந்து கொண்டு, கதறி அழுதபடியே பிரியா விடை அளித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com