அருப்புக்கோட்டை கண்மாயில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் கரையோரத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காக கல்லூரி மாணவர்கள் சிலர் குழி தோண்டினர்.
அருப்புக்கோட்டை கண்மாயில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
Published on
அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் கரையோரத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காக கல்லூரி மாணவர்கள் சிலர் குழி தோண்டினர். அப்போது, சிதைந்த நிலையில் சில சுடுமண் ஓடுகள் கிடைத்தன. ஆர்வமடைந்த மாணவர்கள் மேலும், தோண்டியபோது முதுமக்கள் தாழிகள் இருப்பது தெரியவந்தது. இதேபோன்று, கண்மாயில் மேலும் பல இடங்களில் சுடுமண் ஓடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் கள ஆய்வு நடத்தி வரலாற்று சான்றுகளை தொல்லியல் துறையினர் சேகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com