அருப்புக்கோட்டை : முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் பழைய மாணவர் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது.
அருப்புக்கோட்டை : முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Published on

நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் பழைய மாணவர் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது. இதில், ஓய்வு பெற்ற பேராசிரியர் பால்பாண்டியன், ISO தரச் சான்றிதழ் ஆலோசகர் இளவரசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை துணைத்தலைவர் பரமசிவம் பங்கேற்றனர். எழுபதுகளில் இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் தங்களுக்கு கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஆசி பெற்றனர். பள்ளியில் தற்போது படிக்கும் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை ஊக்குவித்தல் மற்றும் ஆசிரியர்களை கெளரவித்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

X

Thanthi TV
www.thanthitv.com