ஆறுமுகசாமி ஆணையம் : ராமமோகனராவ், ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க மனு தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகனராவ், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க ஆணைய வழக்கறிஞர் முகமது ஜாபருல்லா கான் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையம் : ராமமோகனராவ், ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க மனு தாக்கல்
Published on
ஜெயலலிதாவுக்கு அப்பலோ மருத்துவமனையில் அளித்த சிகிச்சைகள் அனைத்தும் தெரிந்த நபர்கள் சசிகலா மற்றும் ராம்மோகனராவ் தான் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிற சிகிச்சைகள் வழங்குவது போன்ற மருத்துவ நடைமுறை சார்ந்த சுமார் 20 ஆவணங்களில் கையெழுத்து போட்டுள்ள நிலையில், இருவரும் முக்கிய பொறுப்பு உள்ளவர்களாக ஆறுமுகசாமி ஆணையம் கருதுவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு மேல்சிகிச்சை அளிப்பது தொடர்பான விசயத்தில், ராம்மோகன்ராவ், ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என்று ஆணைய வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com