ஜெயலலிதாவின் உடல்நிலை ஆரம்பம் முதலே மோசமாக இருந்தது - அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான மருத்துவர் பாபு மனோகர், ஜெயலலிதாவின் உடல்நிலை துவக்கம் முதலே மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் உடல்நிலை ஆரம்பம் முதலே மோசமாக இருந்தது - அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர்
Published on

2016 செப்டம்பர் 28ம் தேதி ஜெயலலிதாவிற்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டதாகவும், அன்று மட்டும் பொருத்தப்படாமல் இருந்திருந்தால் அன்றைய தினமே அவர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

அப்போது ஆணைய வழக்கறிஞர்கள் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தனர்.

சுவாசக்குழல் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒருவர் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அது ஒன்றும் தவறு அல்ல என மருத்துவர் பாபு மனோகர் பதிலளித்துள்ளார்.

நுரையீரலில் நோய் தொற்று உள்ள ஒருவர் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? என்ற கேள்வியை முன்வைத்த போது, இதுகுறித்து ஐசியூ மருத்துவர்களிடம் தான் கேட்க வேண்டும் எனவும் பாபு மனோகர் பதிலளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மருத்துவமனையில் ஜெயலலிதா உட்கொண்ட உணவு வகைகள் அனைத்தும் மருத்துவ ரீதியாக ஒத்துப்போகவில்லை என்பது மருத்துவர் பாபு மனோகர் விசாரணைக்கு பின் உறுதிபடுத்தப்பட்டிருப்பதாக ஆணையம் வட்டாரம் தரப்பில் கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com