சசிகலாவிடம் விசாரணை நடத்த பெங்களூரு சிறைத்துறைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக கர்நாடக மாநில சிறைத்துறைக்கு, ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சசிகலாவிடம் விசாரணை நடத்துவது குறித்து, தமிழக உள்துறைக்கும், ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து, சசிகலாவிடம் முதல்முறையாக நேரில் விசாரணை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com