College Reopen || 3 நாட்களில் தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகள் திறப்பு..

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும், கலை அறிவியல் கல்லூரிகள் வரும் 16ம் தேதி திறக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார். கலை, அறிவியல் கல்லூரிகளில் தற்போது புதிய மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 16ம் தேதி அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com