கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரேநாளில் 80,000 பேர் விண்ணப்பம் - அமாவாசை நாளில் சேர ஆர்வம் காட்டிய மாணவர்கள்

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஒரே நாளில் 80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரேநாளில் 80,000 பேர் விண்ணப்பம் - அமாவாசை நாளில் சேர ஆர்வம் காட்டிய மாணவர்கள்
Published on
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஒரே நாளில் 80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் கலை அறிவியல் படிப்பிற்கு மொத்தம் 1 லட்சத்து 71 ஆயிரத்து 350 இடங்கள் உள்ளன. இதற்கு ஆன்லைன் வாயிலான மாணவர் சேர்க்கை 20ஆம் தேதி துவங்கியது. முதல் நாளே அமாவாசை நல்ல நாள் என்பதால் விண்ணப்பிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக ஒரே நாளில் 80 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்தனர். வரும் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com