

மறைந்த முன்னாள் முதல்வர்கள் போல் வேடமணிந்து நாடக கலைஞர்கள் நிவாரண பொருட்களை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். நெல்லை மாவட்ட நாடக கலைஞர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி, அதன் மூலம் கிடைக்கப்பட்ட பொருட்களை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். இதில் அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி. ஆர், கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு விதமான வேடம் அணிந்திருந்தனர்.