3 வயது குழந்தைக்கு செயற்கை கால்... கோவை மருத்துவர்கள் சாதனை

x

கோவை அரசு மருத்துவமனையில், செயற்கை உடல் உறுப்புகள் தயாரிப்பில் புதிய மைல்கல்லாக, 3 வயது சிறுவனுக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மூன்று வயது சிறுவன் ரிஸ்வந்துக்கு பிறவியிலேயே இரு கால்களும் சிதைந்த நிலையில், வலது காலை முட்டிக்குக் கீழ் அகற்றி, செயற்கை காலை வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்