மீண்டும் தமிழ் தலைவாஸ் அணியின் மெயின் ஸ்பான்சரான ARS Steels
புரோ கபடி லீக் 12-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் மெயின் ஸ்பான்சராக ஏஆர்எஸ் ஸ்டீல்ஸ் நிறுவனம் மீண்டும் இணைந்துள்ளது. ஏற்கெனவே, 10ஆவது சீசனில் தமிழ் தலைவாஸ் - ஏஆர்எஸ் ஸ்டீல் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, 12வது சீசனிலும் வெற்றிப் பயணம் தொடர உள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்ட தமிழ் தலைவாஸ் அணியின் சிஇஓ சுஷேன் வசிஷ்த், 10வது சீசனில் ஏஆர்எஸ் ஸ்டீல் அளித்த ஆதரவு, தமிழ் தலைவாஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்தது என்று தெரிவித்தார். மீண்டும் இணைந்த இந்த கூட்டணி, நீண்டகால வெற்றிக்கான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.
Next Story
