தாசில்தாருக்கு பிடிவாரண்ட் - நீதிபதி அதிரடி...

நில வழக்கில் சாட்சி சொல்ல ஆஜராகாததால் தாசில்தாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு
தாசில்தாருக்கு பிடிவாரண்ட் - நீதிபதி அதிரடி...
Published on
நாகை மாவட்டம், கடலங்குடி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர், தனது நிலத்தை ஜீவானந்தம் என்பவர் அனுபவித்து வருவதாக 2015-ம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சி சொல்வதற்காக குத்தாலம் வட்டாட்சியருக்கு, பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போதும் அவர் ஆஜராகாததால் வரும் 11ம் தேதி குத்தாலம் வட்டாட்சியரை ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி சதீஷ் உத்தரவிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com