Arrest | Salem | 2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர் கைது
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, ஏழு வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவியிடம், அதே பள்ளியின் ஆசிரியர் பிரான்சிஸ் ஆண்டனி பாலியல் ரீதியில் அத்துமீறி உள்ளார். இதுதொடர்பாக சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், ஆசிரியர் பிரான்சிஸ் ஆண்டனி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.
Next Story