தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அரியர்ஸ் தேர்வுகளுக்கு பணம் கட்டியிருந்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்புக்கு திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சய் நன்றி தெரிவித்துள்ளார். பொறியியல் மாணவரான சஞ்சய் 24 அரியர்ஸ் வைத்திருந்த நிலையில் முதலமைச்சரின் அறிவிப்பால் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மாணவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.