Arjunsampath காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை கோரி அர்ஜுன் சம்பத் மனு
காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை கோரி அர்ஜுன் சம்பத் மனு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதாகக் கூறி காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க கோரி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், டிஜிபியிடம் மனு அளித்துள்ளார். நட்சத்திர விடுதிகளில் மது அருந்தி ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது உள்ளிட்ட செயல்களால் சமூக அமைதி பாதிக்கப்படுவதாக மனுவில் அவர் தெரிவித்துள்ளார்... இதனால் தமிழகம் முழுவதும் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அர்ஜூன் சம்பத் அளித்துள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
