சிறுவன் உயிருக்கு ஆபத்தாக அமைந்த `புறா'... பதறவைக்கும் காட்சிகள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புறா பிடிக்க சென்ற போது கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வடகடல் கிராமத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள வளவெட்டி குப்பம் விவசாய நில பகுதியில் புறா பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்குள்ள 30 அடி ஆழ நீரில்லாத கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறுவனை பத்திரமாக மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்... இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com