Ariyalur | Vao | Viral Video | விவசாயிடம் லஞ்சம் வாங்கிய VAO.. தீயாய் பரவும் வீடியோ
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில், தனி பட்டா கோரி விண்ணப்பித்த விவசாயிடம் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.என். குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தட்சிணாமூர்த்தி, தான் அளித்த மனு தொடர்பாக கூவத்தூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றபோது, கிராம நிர்வாக அலுவலர் திருஞானசம்பந்தம் விவசாயி தட்சிணாமூர்த்தியிடம், தனி பட்டா மாற்றம் செய்ய 2000 ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார். 1000 ரூபாய் தான் இருக்கிறது எனக்கூறியபோதும், 2000 ரூபாய் தான் வேண்டும் என கூறி, அவர் லஞ்சம் பெற்றுள்ளார்.
Next Story
