Ariyalur | TN Police | CPM | பெண் மீதான தாக்குதலை கண்டித்து கம்யூ, கட்சி போராட்டம் - தள்ளுமுள்ளு
Ariyalur | TN Police | CPM | பெண் மீதான தாக்குதலை கண்டித்து கம்யூ, கட்சி போராட்டம் - தள்ளுமுள்ளு #Ariyalur #CPM #TNPolice அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மாதர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜெயங்கொண்டம் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி வேல்முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
