அரியலூர் டூ குமரி... அதிர வைத்த கிரைம்... சிவகங்கையில் சிக்கிய கேங் - பகீர் பின்னணி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகளை கொள்ளையடித்த 5 நபர்களை போலீசார் கைது செய்தனர். உடையார்பாளையம் அருகே கச்சிப்பெருமாள் கிராமத்தை சேர்ந்த வசந்தா என்பவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், 1 லட்சம் பணம், 100 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். இதுகுறித்து வசந்தா அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட நபர்கள் கன்னியாகுமரியில் இருப்பதை கண்டறிந்தனர். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சண்முகநாதன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
Next Story
