Ariyalur | தலையில் ஒத்த ரூபாய் காயினோடு படுத்த மனித உருவம் - பீதியில் அலறிய அரியலூர் கிராமம்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பில்லி சூனியம் வைத்ததைப் போல் வீதியில் கிடந்த மனித உருவ பொம்மையால் மக்கள் பீதியடைந்தனர்...இலங்கச்சேரி கிராமத்தில் மர்ம நபர்கள் யாரோ சாலையில் மாந்திரீகம் செய்து பூஜை நடத்திச் சென்றதைப் போல் மஞ்சள் குங்குமம் தூவியிருந்த நிலையில், இதைக் கண்ட மக்கள் பீதியடைந்தனர்... அதிலும் மனித உருவ பொம்மையின் தலையின் மீது ஒரு ரூபாய் நாணயமும் இருந்துள்ளது... அப்பகுதி மக்களின் தூக்கத்தைக் கெடுத்த அந்த மர்ம நபர்கள் யார்? என காவல்துறை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது...
Next Story
