இந்தோனேசியா தமிழ்ச் சங்கம் உதவி - ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவிகள் வழங்கல்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மருத்துவ உபகரணங்களை தன்னார்வர்கள் அதிக அளவில் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தோனேஷியா தமிழ் சங்கத்தின் சார்பில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 10 ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவிகளும், 8,330 ஜோடிகளும் கையூறைகள், 1,100 மதிப்பிலான முதியோர் டையபர்களும் , ஆயிரம் என ஒருமுறை பயன்படுத்தும் போர்வை மற்றும் தலையனை உறைகள் என 10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. வெங்கடேஷ்வரர், மணிமாறன், மயில்சாமி ஆகியோர் இந்த பொருட்களை ஆட்சியர் ரத்னாவிடம் ஒப்படைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com