Ariyalur | நகையை திருப்பி கேட்டதால் கார் ஏற்றி கொன்ற கொடூரன் - அரியலூரில் பயங்கரம்
நகையை திருப்பி கேட்டதால் தகராறு - கார் ஏற்றி ஒருவர் கொலை
அரியலூர் மாவட்டம் திருமானூரில், கொடுத்த நகையை திருப்பி கேட்ட தகாராறில், கார் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைவேலு என்பவரின் மனைவி முத்துக்கண்ணு, தன் தங்கை கடல் கன்னிக்கு உதவ நகை கொடுத்ததாக கூறப்படுகிறது. திருப்பிக் கேட்ட போது ஏற்பட்ட தகராறில், கடல் கன்னியின் மகன் திவாகர், தனது பெரியப்பாவான குழந்தைவேலு மீது காரை ஏற்றி கொலை செய்தார். இதில், மற்றொருவர் படுகாயம் அடைந்த நிலையில், திவாகர் மற்றும் அவரது பெற்றோரிடம் திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
