Ariyalur | Attack On Police | தட்டிக்கேட்ட காவலர்கள் மீது கொடூர தாக்குதல்.. தட்டி தூக்கிய போலீஸ்

தட்டிக்கேட்ட காவலர்கள் மீது கொடூர தாக்குதல்.. தட்டி தூக்கிய போலீஸ்

#Ariyalur #Attack #TNPolice #ThanthiTV Ariyalur | Attack On Police | தட்டிக்கேட்ட காவலர்கள் மீது கொடூர தாக்குதல்.. 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, நள்ளிரவில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட காவலர்கள் இருவர் மீது மூன்று இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தளவாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ராஜா கண்ணன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் ஆகியோர் ரோந்துப் பணியில் இருந்தபோது, சிலுப்பனூர் பகுதியில் மது அருந்தியவர்களைக் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூவரும், காவலர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவலர் ராஜா கண்ணனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக மதிவாணன், தாமரைக்கண்ணன், இளம்பரிதி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X