மக்களின் அழைப்பு... நாளை CM ஸ்டாலின் அரிட்டாப்பட்டி பயணம் | Arittapatti
டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் விடுத்த அழைப்பின்பேரில், முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அரிட்டாப்பட்டி செல்கிறார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே, டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. முதலமைச்சரை டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் சந்தித்து பாராட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். இந்நிலையில், முதலமைச்சர் நாளை அரிட்டாப்பட்டி செல்கிறார்.
Next Story
