பிடிபட்டது காட்டு யானை அரிசி ராஜா : மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர் வனத்துறையினர்

பொள்ளாச்சி பகுதியில் பல மாதங்களாக சுற்றித்திரிந்த அரிசி ராஜா என்ற காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
பிடிபட்டது காட்டு யானை அரிசி ராஜா : மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர் வனத்துறையினர்
Published on
பொள்ளாச்சி பகுதியில் பல மாதங்களாக சுற்றித்திரிந்த அரிசி ராஜா என்ற காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அர்த்தனாரி பாளையம் பகுதியில் 4 நாட்களாக முகாமிட்டு இருந்த 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர், அரிசி ராஜாவை 2 கும்கி யானைகள் உதவியுடன் பிடித்தனர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட பிறகு கலீம், கபில்தேவ் ஆகிய கும்கி யானைகள் அரிசி ராஜாவின் கழுத்தில் கயிறுகளை கட்டி அதனை கட்டுப்படுத்தின. தொடர்ந்து வனத்துறை வாகனத்தில் ஏற்றப்பட்ட அரிசி ராஜா, டாப்சிலிப் வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com