Parvathamalai | பருவதமலை போறீங்களா? - புதிய கட்டுப்படுகள்...பல மாற்றங்கள்

பருவதமலை போறீங்களா?

#Parvathamalai | #Tiruvannamalai பருவதமலை போறீங்களா? - புதிய கட்டுப்படுகள்...பல மாற்றங்கள் பிரசித்தி பெற்ற பருவதமலை ஏறும் பக்தர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 18 முதல் 60 வயதுக்குட்பட்டோர், ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதிலும் பருவதமலை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 200 பேருக்கு மட்டுமே நாளொன்றுக்கு மலையேற அனுமதியளிக்கப்படும். இதர மாவட்டங்களைச் சேர்ந்த 800 பேர் இதற்கென இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com