``எங்ககிட்டயே காசு பிடிப்பியா’’ - டோல்கேட்டில் தவாக-வினர் ரகளை
சுங்கச்சாவடியில் த.வா.க. கட்சியினர் ரகளை
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அந்தக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு பரனூர் சுங்கச்சாவடி வழியாக நிர்வாகிகள் சென்றனர். அப்போது ஒரு வேனுக்கு பாஸ்ட் ட்ராக் மூலம் பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக த.வா.க. நிர்வாகிகள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்டதால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து ஏற்பட்டது.
Next Story
