``பட்டியல் சமூகம்னு புறக்கணிப்பு பண்றீங்களா?’’ - காங்கிரஸ் கூட்டத்தில் பரபரப்பு

x

இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - பரபரப்பு

தென்காசியில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் ஊழியர்கள் குழு கூட்டத்தில், இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரிய பிரகாஷ் பங்கேற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன் என்பவர், கூட்டம் குறித்து தனக்கு தகவல் கூறாத‌து ஏன்? என கேள்வி எழுப்பினார். தான் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கிறீர்களா? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றியது. கைகலப்பாகும் சூழல் ஏற்பட்டதால், அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்