"நீங்களும் கிரெடிட் கார்டு யூசர் ஆ?" - பேராசையால் பறிபோன பணம்.. மோசடி வழக்கில் போலீசார் வலைவீச்சு

சென்னை புழலில், கிரெடிட் கார்டில் கடன் தொகையை அதிகரித்து தருவதாகக் கூறி, சுமார் 70 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரபல வங்கியின் ரூபே க்ரெடிட் கார்டு பயன்படுத்தி வரும் சென்னை புழலைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில், எஸ்பிஐ வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாகவும், நீங்கள் பயன்படுத்தி வரும் க்ரெடிட் கார்டில் கடன் தொகையை அதிகரித்து தருவதாகவும், அதற்கு OTPஐ கூறுமாறு கேட்டுள்ளனர். அதனை நம்பிய ஓடிபியை கூற, சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 70 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெய்சங்கர், இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com