செல்போன் டவரால் குழந்தையின்மையா? - பரபரப்பை கிளப்பிய மக்கள்
சேலம் மின்னாம்பள்ளி ரயில்வே கேட் பகுதியில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பெண்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செல்போன் டவர் அமைத்ததால், ஒருவருக்கு மட்டுமே இருந்த புற்றுநோயானது, பலருக்கும் அதிகரித்து உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர். செல்போன் டவரினால் தான், பெண்களுக்கு கருமுட்டை சிதைவு ஏற்பட்டு, குழந்தைபேறு இல்லாமல் தவிப்பதாகவும் பலரும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளனர்.
Next Story
