Arcot | ஆற்காடு அருகே தம்பதிக்கு கத்திகுத்து சர்ச்சில் பயங்கரம்..!

x

ஆற்காடு அருகே கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்காக தேவாலயத்தை அலங்கரித்து கொண்டிருந்த தம்பதியை நகராட்சி கணக்காளர் உட்பட 4 பேர் சரமாரி கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளைவ்பஜார் பகுதியை சேர்ந்த வினோத் குடும்பத்திற்கும், நகராட்சியில் கணக்காளராக பணியாற்றி வரும் ராஜேஷ் என்பவருக்கும் குடும்ப தகாரறு காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகாக வினோத்தும் அவரும் மனைவியும் தேவாலயத்தை அலங்கரித்து கொண்டு இருந்த போது 4 பேருடன் வந்த அங்கு நகாரட்சிகணக்காளர் ராஜேஷ், தம்பதி இருவரையும் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். கத்திய குத்திய 4 பேரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்