Aranthangi | வெடித்த திடீர் போராட்டம்... 100 லாரிகளுடன் நெல் மூட்டைகள் தேக்கம்...
வெடித்த திடீர் போராட்டம்... 100 லாரிகளுடன் நெல் மூட்டைகள் தேக்கம்... புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை தமிழ்நாடு வாணிப கழகத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்றி இறக்கும் லாரி உரிமையாளர்கள் வாடகை கட்டவில்லை என்று கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை தமிழ்நாடு வாணிப கழகத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்றி இறக்கும் லாரி உரிமையாளர்கள் வாடகை கட்டவில்லை என்று கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 100 லாரிகளுடன் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.... அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் அழியாநிலை என்ற இடத்தில் தமிழக அரசின் வாணிப கழகத்திற்கு சொந்தமான நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்படும் குடோன் உள்ளது.... அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள் அந்தந்த பகுதிகளில் இருந்து இந்த குடோனுக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.... இந்த நிலையில், நெல்மூட்டைகள் ஏற்பட்டு குடோனுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் லாரி உரிமையாளர்களுக்கு குறைவான வாடகை கொடுத்தும் லாரி டிரைவர்களுக்கு வழங்கக்கூடிய படிக்காசை வழங்காமல் டெண்டர் எடுத்த நிறுவனம் செய்து வந்ததால், போராட்டத்தில் ஈடுபட்டனர்... இதனால் நெல் மூட்டைகள் குடோனுக்குள் வராமல் குடோன் வாசலிலேயே லாரிகளுடன் நெல்மூட்டைகள் குடோனுக்குள் வராமல் தேக்கமடைந்துள்ளன...
