மணல் திருட்டின் போது இளைஞர் உயிரிழப்பு : சடலத்தை போலீசார் கைப்பற்ற கிராமமக்கள் எதிர்ப்பு

ஆரணியில் மணல் திருட்டில் ஈடுபட்டபோது மணலில் புதைந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணல் திருட்டின் போது இளைஞர் உயிரிழப்பு : சடலத்தை போலீசார் கைப்பற்ற கிராமமக்கள் எதிர்ப்பு
Published on

ஆரணியில் மணல் திருட்டில் ஈடுபட்டபோது மணலில் புதைந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் காலனி பகுதியை சேர்ந்த சரவணன், தனது நண்பர்கள் மகாலிங்கம் மற்றும் குட்டிமணியுடன் சேர்ந்து கமண்டல நாகநதி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டார். அப்போது திடீரென சரிந்த மணலில் புதைந்து சரவணன் மூச்சு திணறி இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சரவணனின் சடலத்தை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். தகவலறிந்த ஆரணி கிராமிய போலீசார் சடலத்தை கைப்பற்ற சென்றனர். அப்போது போலீசாரை தடுத்து சேவூர் காலனி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் நிலைமையை எடுத்து கூறி சமரசம் செய்தனர். இதனையடுத்து மறியலை பொதுமக்கள் கைவிட, சரவணன் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com