`கொளுத்தும் வெயிலில் அலைய விட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள்' - கால் முறிந்த பெண்ணுக்கு நடந்த அவலம்

`கொளுத்தும் வெயிலில் அலைய விட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள்' - கால் முறிந்த பெண்ணுக்கு நடந்த அவலம்
Published on

சாலை விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட அமுதா என்பவர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு எக்ஸ்ரே எடுக்க முடியவில்லை எனக்கூறி அவரை தனியார் மையத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்தனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் கால் முறிவு ஏற்பட்ட பெண்மணியை அவருடைய உறவினர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்து சென்றது இணையத்தில் பரவி வருகிறது.

மேலும் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் எவ்வித வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அலை கழிக்கப்படுவது வேதனையாக உள்ளதாகவும் இது குறித்து ஏன் மாவட்ட நிர்வாகம் தலையிடுவதில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com