அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம்-சாலையின் குறுக்கே தொங்க விடப்பட்ட கருப்புக் கொடிகள்

அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கக் கோரி கருப்புக்கொடி ஏற்றி நூதனப் போராட்டத்தை நடத்தப் போவதாக அனைத்து சங்கங்க​ளின் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம்-சாலையின் குறுக்கே தொங்க விடப்பட்ட கருப்புக் கொடிகள்
Published on
அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கக் கோரி கருப்புக்கொடி ஏற்றி நூதனப் போராட்டத்தை நடத்தப் போவதாக அனைத்து சங்கங்க​ளின் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை அரக்கோணம் நகரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் பெரிய அளவிலான கருப்புக் கொடிகள் தொங்கவிடப்பட்டு இருந்தன. இதனையும், சுவரொட்களையும் மக்கள் பார்த்து சென்றவண்ணம் இருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து செயல்பட்டு சாலையின் குறுக்கே தொங்கவிடப்பட்டு இருந்த கருப்புக் கொடிகளை அகற்றினர்.
X

Thanthi TV
www.thanthitv.com