சத்தியபாமா நிகர்நிலை பல்கலை.யில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
சென்னை ஓ.எம்.ஆரில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், 91 சதவீத மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. சத்தியபாமா சாதனையாளர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் 2025-ம் ஆண்டில் சிறந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன் உள்ளிட்டோர் தலைமையேற்று வேலை வாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி கவுரவித்தனர். வேலைவாய்ப்புக்கு பதிவு செய்த மாணவர்களில் 91 புள்ளி 87 சதவீத மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த சம்பளத்துடன் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
Next Story
