ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.
ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்
Published on

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இதுவரை 105க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பலோ மருத்துவர்களிடம் ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் இன்று, அப்பலோ தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மூத்த மருத்துவர்களான பாபு கே ஆப்ரகாம், பாலா பிரகாஷ் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இவர்கள் இருவரும் ஜெயலலிதா சிகிச்சை குறித்த மருத்துவ அறிக்கையை தயார் செய்தவர்கள் என்ற அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. மற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதால், இவர்களிடம் பல்வேறு கேள்விகளை ஆணையம் கேட்டது. இதன்மூலம், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான முக்கிய தகவல்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com